விசிக புல்லட் பேரணி நடத்த அனுமதி

60பார்த்தது
விசிக புல்லட் பேரணி நடத்த அனுமதி
சாதிய தீண்டாமை வன்கொடுமையைக் கண்டித்து விசிக சார்பில் வரும் 28ஆம் தேதி மதுரையில் புல்லட் பேரணி நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் இருந்து காந்தி அருங்காட்சியகம் வரை புல்லட் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிவகங்கையில் அண்மையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் புல்லட் பைக் ஓட்டியதாக கூறி, அவரது கையை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை கண்டித்து விசிக பேரணி நடத்துகிறது.

தொடர்புடைய செய்தி