நட்சத்திர சின்னம் (*) குறியீட்டுடன் கூடிய ரூ.500 நோட்டுகள் போலியானவை, அதனை வாங்க வேண்டாம் என சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்து விளக்கமளித்த மத்திய அரசின் PIB FACT CHECK நிறுவனம். (*) குறியீட்டுடன் கூடிய ரூ.500 நோட்டுகள் செல்லும் எனவும், 2016ல் இருந்து இந்த நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகவும், அவை போலியானவை இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது. எனவே சமூகவலைதளங்களில் வரும் போலியான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்.