
சீவலப்பேரி: நெல் அறுவடை பணி தீவிரம்
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள நொச்சிகுளத்தில் அதிகமான வயல்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த அறுவடையின் போது இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். மேலும் உளுந்து விதைக்கும் பணியிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.