திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த தமிழாசிரியர் உமர் பாரூக் இன்று (டிசம்பர் 22) வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அரையாண்டு தேர்வு முடிந்து வருகின்ற 24-ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது. இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.