திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிதண்ணீர் லைன் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி செல்கின்றது. இதன் காரணமாக சாலைகளிலும் தண்ணீர் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி அடைப்பை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.