திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள செல்வமருதூர் அருள்மிகு ஸ்ரீ பெரியம்மன் திருக்கோவிலில் இன்று (ஜனவரி 2) ஸ்ரீ தர்மசாஸ்தா மண்டல பூஜை கன்னி பூஜை நடைபெற்றது. இதில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை போற்றி துதி பாடல் பாடினர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.