ஆந்திராவில் களமிறங்கிய நெல்லை வேட்பாளர்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. எனவே தமிழகத்தில் போட்டியிடும் தேசிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அண்டை மாநிலங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் இன்று ஆந்திரா மாநிலம் நெல்லூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜுவை ஆதரித்து தீவிர பரப்புரை செய்தார்.