தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகின்ற பிப்ரவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக நெல்லைக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு முதல்வர் பங்குபெறும் நிகழ்ச்சி நடைபெறும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் சீரமைப்பு பணியை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் ஆகியோர் இன்று (ஜனவரி 21) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.