திருநெல்வேலி மாவட்டம் புதுப்பேட்டை சேகரத்திற்கு உட்பட்ட கொண்டாநகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இன்று (பிப்ரவரி 9) காலை பெண்கள் ஐக்கியம் சங்கம் சார்பாக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சேகர குருவானவர் சுரேஷ் முத்துக்குமார், சபை ஊழியர் அன்பு ஏசயா மற்றும் சபை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.