திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நேற்று (ஜனவரி 30) மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியானது ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த நிலையில் மேலப்பாளையம் பகுதி விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் அப்துல் கோயா நேற்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.