நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள குழந்தைகளுக்கு கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக 18வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பயிற்சியை துவக்கி வைத்தார். இதில் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி, முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.