தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (டிசம்பர் 23) முன்னாள் திருநெல்வேலி எம்எல்ஏ மாலைராஜா சார்பில் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கிரைண்டரை திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே. என். நேரு வழங்கினார். இந்த நிகழ்வின்பொழுது திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.