மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய பெருந்தலைவர்
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு செழியநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்.,19) நடைபெற்றது. இதில் மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.