திருநெல்வேலி மாநகர மாவட்டத்தின் அதிமுக நிர்வாகிகளான கற்பகவள்ளி, நவீன் ஆகியோர் கட்சி கொள்கைக்கு புறம்பாக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் கட்சியினர் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.