சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
நெல்லை மாநகர பழைய பேட்டை நெல்லையாபுரம் பகுதி சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்து இடைஞ்சலாக காணப்படுகின்றது. எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று (செப்.,21) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.