

தேனி: வாழை உற்பத்திக்கு கோழி உரம் இறக்குமதி
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கன்னிசேர்வைபட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம், வெள்ளையம்மாள்புரம், எரசக்கநாயகனூர், பூசாரிகவுண்டன்பட்டி பகுதியில் செவ்வாழை, பச்சை வாழை, நாளிபூவன் உள்ளிட்ட வாழைகளை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். இதற்கு தேவையான கோழிக்கழிவு உரத்தை நாமக்கல்லில் இருந்து லாரியின் மூலம் இறக்குமதி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர்.