விருதுநகர் அருகே மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப். 12) அதிகாலை நடந்த சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது லாரி ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டதால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.