ஆண்டிபட்டி: விசைத்தறி தொழிலாளர் தாலுகா அலுவலகம் முற்றுகை

58பார்த்தது
ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் முற்றுகையிட முயன்ற விசைத்தறி தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே டி. சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு 23வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் விசைத்தறி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி