ஆண்டிபட்டி அருகே 1000 மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே தாழையூத்து மலை அடிவாரப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இங்கு தினமும் யானைகள் கூட்டமாக வந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களின் குருத்துகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் யானை கூட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்