தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அண்ணாவின் 56-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேது ராஜா, நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.