தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.6) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முறுக்கோடை இராமர் கலந்துகொண்டு அதிமுக பூத்துக் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் லோகிராஜன், வரராஜன், மற்றும் பேரூர் கழகச் செயலாளர், ஒன்றிய நிர்வாகிகள், அதிமுக பொறுப்பாளர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.