கேரளா: 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். தீபு பிலிப் (36) என்ற நபர் தன்னை ஒரு அனாதை என்று பெண்களிடம் அறிமுகப்படுத்தி கொண்டு தான் தனிமையில் வாடுவதாக கூறி அவர்களின் அனுதாபத்தை பயன்படுத்தி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு பெண்ணுடன் சிறிது காலம் வாழ்ந்து, பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தது விசாரணையில் தெரிந்தது.