தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடி போட்டியை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அணிகளுக்கு பரிசுகளும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.