தவெகவில் பதவி வழங்காத நிலையில் அக்கட்சியை சேர்ந்த நடிகர் தாடி பாலாஜி வைத்த ஸ்டேட்டஸ் சலசலப்பை உண்டாக்கி அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து மெளனம் கலைத்துள்ள தாடி பாலாஜி, "யாரோ ஒருவர் எனக்கு அனுப்பியதை நான் எதேச்சையாக எனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்தேன். அது இப்படியொரு விவாதப்பொருளாகும் என்று எனக்கு தெரியாது. பதவியை எதிர்பார்த்து நான் பணி செய்யவில்லை" என்றார்.