தேனி மாவட்டம் லோயர் கேம் அருகே உள்ள பளியன்குடியில் உள்ள மலைவாழ் மக்களின் குலதெய்வம் பளிச்சியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் இன்று (ஜன-31) நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி பளியன் சித்தன் தலைமையில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பளியன்குடியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்