ஆண்டிபட்டி: பெண் கல்வியை ஊக்கப்படுத்த விழிப்புணர்வு பேரணி

56பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உட்பட்ட வருசநாடு அரசு மேல்நிலைப் பள்ளி சார்பாக இன்று(ஜன 28) வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் குழந்தை திருமண தடைச்சட்டம், பெண் குழந்தைகளின் மேல்நிலைக் கல்வி மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பயிலுதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண், ஆண் பிறப்பு விகிதம் உள்ளிட்டவை குறித்து பேரணியாக சென்று மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி