தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்க பணியாளர்களின் போராட்டம்
பாபநாசம் அக் 23 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் 3அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்க பணியாளர்களின் 2வது நாள் காலவரற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது இப் போராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமை வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கிப் பேசினார் இப் போராட்டத்தில் பாபநாசம் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் ஒன்றிய துணைத் தலைவர் ரவி ஒன்றிய பொருளாளர் அமலநாதன் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்கள் பணியாளர்கள் விற்பனையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இப் போராட்டத்தினால் கூட்டுறவு அங்காடிகளில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமலும் நகை கடன் பெற முடியாமல் தவித்து வருகின்றனர் இப்பருவத்திற்கு ஏற்ற இடுபொருள்கள் வாங்க முடியாமலும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.