திருவையாறு - Thiruvaiyaru

செங்கிப்பட்டி: லாரி, டிராக்டர் மோதல்: ஒருவர் பலி

செங்கிப்பட்டி: லாரி, டிராக்டர் மோதல்: ஒருவர் பலி

செங்கிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவிலிருந்து திருச்சி நோக்கி டாரஸ் லாரி ஒன்று சென்றது. அப்போது எதிர்திசையில் டிராக்டர் ஒன்று வந்தது. எதிர்பாராதவகையில் டாரஸ் லாரியும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் டிராக்டரில் வந்த கள்ளப்பெரம்பூர் ஒன்றாம் சேத்தி அருவன்குளம் தெருவை சேர்ந்த வீரமணி (57) மற்றும் ஒருவர் என்று இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.  தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் வீரமணி உட்பட 2 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி இறந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా