நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை

58பார்த்தது
பாபநாசம் அருகே தஞ்சை - விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த பக்கவாட்டு சுவர் உடனடியாக சீரமைப்பு

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை



தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் அருகே மேல செம்மங்குடி பகுதியில் உள்ள அணுகு சாலையின் பக்கவாட்டு சுவர் சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் சரிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். அணுகு சாலையின் சரிந்து விழுந்த பக்கவாட்டு சுவரை ஜேசிபி எந்திரம் மூலமும், இயந்திர சிமெண்ட் கலவை மூலமும் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் தரமான முறையில் செப்பனிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். உடனடி நடவடிக்கை எடுத்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி