திருவையாறு அடுத்த கடுவெளி கிராமத்தில் ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவிலில் நவகிரகம் கிடையாது. நவகிரகமே ஸ்வாமியை தரிசனம் செய்வதாக வரலாறு. இக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆகாசபுரீஸ்வரர் மங்களாம்பிகை மூலவருக்கு அபிஷேகமும், தண்டாயுதபாணி சுவாமிக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. காவிரி ஆற்றங்கரையில் தீர்த்த வாரியம் நடைபெற்றது.