தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டையில் வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ் எழுதிய வரலாற்றில் அய்யம்பேட்டை நூல் வெளியீட்டு விழா முன்னாள் அரசு வழக்கறிஞர் துளசி அய்யா தலைமையில் நடைபெற்றது. பிரதாப சாவடி ஐயா, அய்யம்பேட்டை சௌராஷ்ட்ரா சபை தலைவர் எஸ். சௌந்தர்ராஜன், அய்யம்பேட்டை பட்டு சாலிய மகாசபை தலைவர் எஸ். ஜி. சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூதலூர் ஒன்றிய துணை தலைவர் சுப்பு வரவேற்று பேசினார். விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே கலந்து கொண்டு வரலாற்றில் அய்யம்பேட்டை நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதல் நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் சிங்கப்பூர் முன்னாள் விரிவுரையாளர் திருநாவுக்கரசு, தஞ்சாவூர் லிட்டில் ஸ்காலர்ஸ் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சுவாமிநாதன், சென்னை கிழக்கு பதிப்பகம் உதவி ஆசிரியர் நன்மாறன் திருநாவுக்கரசு ஆகியோர் மதிப்புரை ஆற்றினர். விழாவில் தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், மானாங்கோரை ஸ்டார் லயன் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரி தலைவர் மதனகோபால், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் உதவி பதிவாளர் (பணி நிறைவு) ஜம்புலிங்கம், தஞ்சாவூர் ராமநாதன் ஆஸ்பத்திரி மருத்துவர் சதீஷ், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார. உள்ளனர்