பாபநாசம் பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழைக்கு நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
பாபநாசம், டிச. 17-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோபுராஜபுரம், மாலாப்புரம், பெருமாங்குடி நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேல் நடப்பாண்டு சம்பா சாகுபடி விவசாயிகள் செய்துள்ளனர்.
இப்பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர்ந்து கனமழை காரணமாக 100 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது அதிக அளவில் செலவு செய்துள்ள நிலையில் கடனை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.