தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சித்தாயல்கிராமத்தில் டிராக்டர் மோதி ஆடுமேய்ப்பவர் உயிரிழந்தார். சித்தாயல் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலன் மகன் சுப்பிரமணியன் (67). இவர் கடந்த 9ஆம் தேதி மதியம் கிராமத்தில் உள்ள வயலில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அங்கே நின்று கொண்டிருந்த டிராக்டரின் பின்புறம் நிழலுக்காக அமர்ந்திருந்தாராம். அவர் இருந்தது தெரியாமல் டிராக்டர் ஓட்டுநர் மன்னார் சமுத்திரம் ஆதிதிராவிடத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் சந்திரசேகரன் (20) என்பவர் டிராக்டரை பின்புறம் எடுத்தபோது சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் பூதலூர் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.