கும்பகோணத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 45ஆம் ஆண்டு துவக்க விழா மாநிலத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் சங்கரராமநாதன், மாநில மூத்த ஆலோசகர் ஸ்ரீராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக திருச்சி தினமலர் ஆசிரியர் பாலாஜி (எ) இராமசுப்பு, ஸ்ரீ நாராயண நிதிலிட் சேர்மன் கார்த்திகேயன், ரோட்டரி முன்னாள் கவர்னர் பாலாஜி, சிவராமன், பராசரன், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் காமகோடி, கோலாகல ஸ்ரீனிவாஸ், வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை குடந்தை ராஜு, குடந்தை வாசு மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.