தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட பராமரிப்பில் உள்ள அய்யம்பேட்டை - அகரமாங்குடி சாலையில் வடக்கு மாங்குடி கிராமத்திலிருந்து அகரமாங்குடி வரை ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்ட ஒரு வழி தடத்திலிருந்து இரு வழி தடமாக அகலப்படுத்தும் பணிகள் மற்றும் சிறிய பாலங்கள் திரும்ப கட்டும் பணிகள் ரூ. 2 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பணிகளை பாபநாசம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திலிப் பிரபாகர், உதவி பொறியாளர் சபரிஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.