பட்டுக்கோட்டை - Pattukottai

தஞ்சாவூர்: நியாயவிலைக் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

தஞ்சாவூர்: நியாயவிலைக் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர், நேற்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். தாமரைச் செல்வன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எம். ராமலிங்கம் கண்டன உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில், "திருச்சி அமராவதி மொத்த கூட்டுறவு பண்டக சாலை விற்பனையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பொட்டல முறையை அமல்படுத்த வேண்டும். எடை குறைவு என கூறி பணியாளர்களுக்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பணி வாய்ப்பு வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் உள்ள 1,091 ரேஷன் கடைகளில் 564 கடைகள் மூடப்பட்டிருந்தன.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా