பட்டுக்கோட்டை பிப். 25ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

55பார்த்தது
பட்டுக்கோட்டை பிப். 25ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் வட்டங்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கோட்ட அளவிலான மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் வட்டத்திற்குட்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி