தஞ்சை: இந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
தஞ்சை: இந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகே திராவிடர் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், இந்தியை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி வளர்ச்சி நிதியைத் தரமுடியும் எனக் கூறும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், இந்தி திணிப்பைக் கண்டித்தும் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வீரையன் தலைமை வகித்தார். 

தலைமைக் கழக பேச்சாளர் சில்லத்தூர் சிற்றரசு சிறப்புரையாற்றினார். மாவட்டக் கழக காப்பாளர் அரு. நல்லதம்பி, மாவட்டக் கழக துணை தலைவர் முத்து. துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் இரா. நீலகண்டன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆ. இரத்தின சபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலர் என். கே. ஆர். நாராயணன், மாவட்ட இளைஞரணி தலைவர் சு. அரவிந்தகுமார், பெரியார் பெருந் தொண்டர் அ. காளிதாசன், இளைஞரணி செயலாளர் சு. வசி மற்றும் ஒன்றிய, நகரத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக நகரக் கழகச் செயலாளர் கா. தென்னவன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி