
பாபநாசத்தில் அதிமுக பரப்புரை
பாபநாசத்தின் முக்கிய வீதிகளில் வழியாக நடந்து சென்று பரப்புரையை துவங்கிய 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர். பேருந்து, தெருவோர கடை வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. அதிமுக தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி தலைமையில், பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை. சண்முகபிரபு முன்னிலையில் பாபநாசத்தின் முக்கிய வீதிகளில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நடந்து சென்று பேருந்து, இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், காய்கறி கடை, தெருவோர கடை வியாபாரிகள், பாதசாரிகள், இல்லங்களில் குடியிருப்போர் என அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் அதிமுக வின் சாதனைகளையும், திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் வகையில் அதிமுக வினர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.