தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் கொடியேற்றினார். பண்டாரவடையில் நடைபெற்ற இந்த மாவட்ட பேரவைக்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வட்டக் கிளை தலைவர் சபாபதி வரவேற்றார்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநிலச் செயலாளர் ரவிச்சந்திரன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் தமிழ்மணி வேலை அறிக்கை, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தனர். ஒருங்கிணைப்பு குழு குருசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி, சிறுபான்மை மக்கள் நலக்குழு காதர் உசேன், ஊரக வளர்ச்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் பால்ராஜ், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, இன்சூரன்ஸ் ஊழியர் முன்னாள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சுவாமிநாதன், ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறைந்தபட்ச ஓய்வூதிய வரம்பில் வராத ஓய்வூதியர்களுக்கு மாதம் 7, 850 அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கமுட்டேஷனை பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டாக குறைக்க வேண்டும். ஓய்வூதியர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.