அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும், இதயத்துடிப்பில் அசாதாரண நிலையை ஏற்படுத்தவும் வழிவகுக்கும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக அளவில் கெட்ட கொழுப்பு சேர்வது, ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பது, இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள் அதிக அளவு காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே மிதமான அளவில் காபி பருக வேண்டும் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.