மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்ட அறிக்கையில், “மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வையற்ற, வாய் பேச இயலாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து திட்டத்தில் பயனடையலாம்.” என தெரிவித்தார்.