தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சன்னதி தெருவில் அமைந்துள்ள பாவம் தீர்த்த பெருமாள் என்று அழைக்கப்படும் பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோயில் பிரகாரத்தில் உள்ள நாகர் சன்னதியில் நாகர் சிலையை சுற்றி மிகப் பெரிய நல்ல பாம்பு ஒன்று தனது சட்டையை சிறிதும் உடையாமல் களையாமல் அப்படியே அவிழ்த்துள்ளது. இது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவிலில் வேண்டுவருக்கு பாவங்கள் நீங்கும் தளமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பாபநாசம் பகுதியில் இச் செய்தியை கேள்விப்பட்டு திரளான பக்தர்கள் திரண்டு வந்து நாகர் சன்னதியில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் பாபநாசம் இந்து சமய அறநிலைத்துறை கோயில் செயல் அலுவலர் விக்னேஷ் ஆய்வாளர் லட்சுமி ஆன்மிக ஒருங்கிணைப்பார் செந்தில் ரஜினி பாய் எழுத்தர்கள் முருகபாண்டியன் பாலு மற்றும் திரளான பக்தர்கள் பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.