பாபநாசம் அருகே தென்பெரம்பூரில் வெண்ணாறிலிருந்து பிரியும் ஜம்பு காவேரி பாசன வாய்க்கால் வடிகாலான மெலட்டூர் அருகே கொத்தங்குடி வரை பாய்கிறது. இந்த பாசன வாய்க்காலால் கொத்தங்குடியில் சுமார் 800 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் குறுவை அறுவடைக்கு பயிர்கள் தயாரான நிலையில், கொத்தங்குடி பகுதியில் மட்டும் ஜம்பு காவேரி பாசன வாய்க்கால் துார் வாரப் படாததால், அதிகளவில் திறக்கப்படும் தண்ணீரால், வாய்க்கால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, குறுவை நெற்பயிர்கள் பாதிப்பிற்கு ஆளாகும் அபாய நிலையுள்ளது.
கரைகளில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் மாவட்ட நிர்வாகம், இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.