கும்பகோணம் - Kumbakonam

கும்பகோணத்தில் பணத்தை மீட்டு தர கோரி பெண் சாலை மறியல்

கும்பகோணத்தில் பணத்தை மீட்டு தர கோரி பெண் சாலை மறியல்

குடந்தை மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கையன் மகள் செந்தாமரை (41). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துள்ளார். பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடந்தைக்கு வந்து அழகு கலை நிபுணராக இருந்துள்ளார். இந்நிலையில் தான் வெளிநாட்டில் சம்பாதித்த கொடுத்த பணம் மற்றும் நகைகளை உறவினர்கள் ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் கொடுத்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று (9ம்தேதி) மதியம் குடந்தை கோர்ட் முன்பு திடீரென சாலையின் குறுக்கே நின்றுக்கொண்டு போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாகவும், தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுவதாக மறியலில் ஈடுபட்டார். இதை பார்த்த போலீசார் ஓடி வந்து செந்தாமரையை பிடித்து சாலையோரத்துக்கு அழைத்து வந்தபோது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலையில் படுத்துக்கொண்டு ரகளை செய்தார். தகவலறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண் போலீசார் உதவியுடன் செந்தாமரையை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதனால் குடந்தை கோர்ட் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా