இந்தியாவில் உள்ள பிரபலமான சிறுசேமிப்பு திட்டங்களுல் ஒன்று கிசான் விகாஸ் பத்ரா திட்டம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். 115 மாதங்களில் உங்களுடைய முதலீட்டை இரட்டிப்பாக்கி பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் இன்று முதலீடு செய்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள், உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். உதாரணமாக ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும். 1 ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதம் KVP திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.