கும்பகோணம் அருகே பல்வேறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு திரும்பியவரை வழிமறித்து முகமூடி அணிந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாள் வெட்டு
கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பாரதி நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ராவணன் என்பவர் மகன் சரண்ராஜ் வயது 24. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் நேற்று காலை ஒரு வழக்கு தொடர்பாக கையெழுத்து போடுவதற்கு சென்று விட்டு திருநாகேஸ்வரம் வழியாக வீடு திரும்பி உள்ளார். சீனிவாசநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் அவரை வழிமறித்து அறிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் சரண்ராஜின் தலைமுகம் கழுத்து கை என பல இடங்களில் வெட்டுப்பட்டு இரத்தம் வழிந்து ஓடியது உடன் வெட்டுப்பட்ட சரண்ராஜ் கும்பகோணம் சுகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது பற்றி திருநீலக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.