வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ரிலீஸாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கான பின்புலத்தை முழுமையாக காட்சிப்படுத்த உள்ளது. டிசம்பர் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.