தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நாகர்கோயில், கோட்டாறு, ஆசாரிப்பள்ளம், ராமன்புதூர், செட்டிகுளம், பீச்ரோடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மதுரை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், சிந்தாமணி, மேலூர், கொட்டாம்பட்டி பெருங்குடி விமான நிலைய பகுதிகளிலும் பலத்த மழை பெய்துவருகிறது.