மதுரை வைகை ஆற்றை ஒட்டிய நெல்பேட்டை பகுதிகளில் ஆடு, மாடு இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி தினத்தை முன்னிட்டு உரிக்கப்பட்ட இறைச்சிகளின் கழிவுகளை வைகை ஆற்று கரையோரம் கொட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கழிவுகளை கொட்டிய கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10ஆயிரம் அபராதம் வீதம் ரூ.50ஆயிரம் வசூலித்துள்ளனர். முன்னதாக, துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.